பயணங்கள்

எதிர்பார்ப்புகள் மட்டுமே நிறைந்த இவ்வுலகில், துளியும் எதிர்பார்ப்பின்றி  ஒவ்வொரு நொடியும் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன. பிறப்பில் உள்ள ஒற்றுமை, உலகை விட்டு பிரியும்போது அவ்வுயிர்களிடம் இருப்பதில்லை. அது ஏனென்று ஆராய்ந்தால் ஒவ்வொரு உயிரும் ஓராயிரம் கதை சொல்லும். எந்தவொரு உயிரும் இங்கே தானாக தோன்றுவதில்லை, ஈருயிர் சேரும்பொழுது தான் தோன்றுகிறது. அவ்வுயிர்கள் சேருகின்ற தருணம், அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கும், ஒரு புதிய உயிர் வாழ்க்கையை தொடங்குவதற்கும் வழி வகுக்கிறது. அவர்கள் சேரும் காரணமே பிறக்கும் புது உயிரின் வாழ்க்கை பயணத்தை தீர்மானிக்கிறது. காரணம் ஆயிரம் இருந்தாலும் அதன் முடிவு ஒன்றாகவே இருக்கிறது, ஒரு புது உயிரை இவ்வுலகிற்கு கொடுக்கிறது. 

உலகத்திற்குள் வரும் அந்த உயிர் தான் இருந்த இடத்தை விட்டு பிரிந்ததை நினைத்தும், புது இடத்திற்கான மாற்றத்தை நினைத்தும் முதல் முறையாக அழுகிறது. அந்த உயிருக்கு அப்பொழுது தெரியாது இந்த மாற்றமும், அழுகையும் முடிவல்ல தொடக்கம்  என்று. காலப்போக்கில், சில உயிர்கள் அழுகையை மறைக்க கற்றுக்கொள்கிறது. சில உயிர்கள் மாற்றத்தை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறது. சில உயிர்கள் மாற்றத்தை தானே முடிவு செய்கிறது. சில உயிர்கள் மாற்றத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்கிறது. அந்த உயிர் முதல் முறை பார்க்கும் அனைவரையும் ஒன்றாகத்தான் பார்க்கிறது. பார்த்தவுடன் சிரிக்கிறது. ஆனால் நாமோ அந்த உயிர்களை மேலே கீழே என்று பலவகைகளில் பிரித்து, ஒவ்வொன்றையும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைகின்றோம். அதன் சிறகுகளை உடைக்கின்றோம். 

அந்த நொடியில் தான் அந்த உயிர்களின் வாழ்க்கைப்பயணமும், அது மற்றவர்களை பார்க்கும் விதமும் மாறத்தொடங்குகிறது.

- தொடரும் .

** முத்துக்குமார் கொளஞ்சிராஜன் **

Comments

  1. Nice to see...
    Keep going on
    Spread this message ..don't leave as it is!!!

    ReplyDelete
  2. சிறப்பானப் பதிவு...
    பதிவில் ஒரு திருத்தம் சிறகுகளை யாரும் உடைப்பதில்லை, சிறகுகளை விரிக்க விடுவதில்லை....

    ReplyDelete
  3. ‌Friend, your post was very knowledgeable, best post'all india world'very good information friends ,apki post very good lagi thanku friend'top job gyan'computer in hindi best information 'best work so work'friends best are your post 'internet in india'

    ReplyDelete

Post a Comment

Popular Posts