ரஸ்னாவும் வேப்பமரமும்
சாலை ஓரத்தில்,. கொளுத்தும் வெயிலில் நடக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த தன் வயது முதிர்ந்த கணவனின் கையைப் பிடித்து இழுத்துச்சென்று அருகிலிருந்த வேப்ப மரத்தடியில் அமரவைத்துவிட்டு பெட்டிக்கடைக்கு வேகமாக ஓடிச்சென்று ஒரு ரஸ்னா வாங்கிவந்தாள் அந்த மூதாட்டி !
வாங்கி வந்ததை அவருக்கு ஊட்டிவிட்டாள் அவள்!
அதில் கொஞ்சம் குடித்துவிட்டு அவளின் கையில் இருந்ததை பிடுங்கி அவளுக்கு ஊட்டிவிட்டார் அவர் !
இப்படியாக இருவரும் ஒருவருக்கொருவர் மாறிமாறி ஊட்டிக்கொண்டனர் ஒருவழியாக அந்த ரஸ்னா காலியானது
இருவரும் ஒருவர் தலையில் ஒருவர் சாய்ந்து இளைப்பாற தொடங்கினர் இதையெல்லாம் கண்ட மரமோ மனம் உருகி வேகமா அசையத்தொடங்கியது இதமான காற்று வீசத்தொடங்கியது
இந்த காட்சிகளையெல்லாம் கண்ட என் கண்ணும் மனமும் குளிரத்தொடங்கியது ஏனோ அவரைக்கண்டு பொறாமையாக இருந்தது காதல் இவ்வளவு தான் மிகச்சாதாரணமாக இருக்கும் ஆனால் இதைப்போல் ஒரு காதல், அன்பு எல்லோருக்கும் கிடைத்திவிடுமா என்பது சந்தேகம் தான்
~ முத்துக்குமார் கொளஞ்சிராஜன்
Comments
Post a Comment