தன்னை அறியா மலர்கள்!!!

எண்ணிலடங்கா வண்ண மலர்கள் கொண்ட அழகிய பூந்தோட்டம் எல்லையில்லா இன்பத்தில் பூத்துக்குலுங்கியது.

வண்ணத்தில் வேறுபாடு இருந்தாலும் எண்ணத்தில் இல்லாமல் ஒற்றுமையோடு ஓங்கி உயர்ந்து வந்தது.

அப்போது அங்கே வந்த ஒரு சில தேனீக்கள்  ஒரு சில மலர்களிடமிருந்து மட்டும் தேனை எடுத்து பயன்படுத்திக்கொண்டது.

இதை பார்த்த மற்ற மலர்கள் தன் மீது குறை இருப்பதாக எண்ணி தன்னைத்தானே தாழ்த்திக்கொண்டது.

ஒரு சில மலர்கள் தன் நிறத்தைமாற்றி தேனீயை கவர்வதாக எண்ணி முட்டாளானது.

எண்ணம்போல் வாழ்க்கை என்பதால் தன்னை அறியாமல் பிறரை பார்த்து தன் சிறப்பை இழந்தது.

தேனீக்களோ, பிற மலர்கள் அழிந்துக்கொண்டு இருந்ததாலும், தனக்கு தேவையான மலர்கள் மட்டும் வளர்ந்ததால் செழிப்பாகவே இருந்தது.

சிறிது காலத்திற்கு பின்னர் ஒரு வண்ணத்தை சார்ந்த மலர்கள் மட்டுமே அந்த தோட்டத்தில் முழுவதுமாக இருந்தது மற்ற வண்ண மலர்கள் ஆங்காங்கே ஒரு மூலையில் மட்டுமே இருந்தது.

பலவண்ணங்கள் அழிந்து ஒரு வண்ணம் மட்டும் செழிக்க யார் காரணம்?

தேனீக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தான் மட்டும் வளர தன் இனத்தை தானே அழித்த மலர்களா???

தன்னை அறியா மலர்களா ???

குறிப்பு: 
பூத்துக்குலுங்கும் மலர்களுக்கு தேனீக்கள்  ஒன்றும் புதிதல்ல, அதை விரட்டினால் அதற்கு பாதிப்பு ஒன்றுமில்லை!!!






Comments

  1. Super da machan..... Go ahead... 🥰😘😍

    ReplyDelete
  2. பூத்து குலுங்கும் மலர்கள் தேனீக்களை கண்டு தன்னிலை மறந்தது. ஒருவர் எக்காரணம் கருதியும் தன்னிலை மறந்தால் அது அழிவுக்கு நேரிடும்.

    ReplyDelete
  3. Priyanga Saminathan18 April 2019 at 17:51

    Really Owesome... Keep writing...��

    ReplyDelete

Post a Comment

Popular Posts