பூக்காத மொட்டு

அருகில் அமர்ந்த சில நிமிடங்களில் தன்னை பற்றி முழுமையாக தெரியப்பபடுத்துகிற மனிதர்கள் இருக்கும் இதே ஊரில் தான் பல வருடமாக பழகியும் அவர்களை பற்றி எள்ளளவும் தெரிந்துகொள்ள முடியாதபடி  நடந்துகொள்ளும் மனிதர்களும் உள்ளனர். அவர்கள் அப்படி நடந்து கொண்டு எதை சாதித்தார்கள் என்ற கேள்வி எழுந்தாலும் அவர்களை அப்படி மாற்றியது யார் என்ற கேள்வியே என்னுள் பலமாக எழுகிறது. தன்னைச்சுற்றி நடப்பவைகளையும் சுற்றியுள்ள மனிதர்களையும் தெரிந்துகொள்ள விரும்பாதவர்கள் தன்னுடைய வாழ்க்கையை கடினமாக்குகிறார்கள் என்றே கூறலாம். இவ்வாறு இருக்கும் மனிதர்களை கண்டால் அவர்களிடம் சென்று ஆசை வார்த்தை கூறி அவர்களை நம் நண்பர்களாக ஆக்கிக்கொண்ட காலம் பள்ளிப்பருவம், ஆனால் இப்பொழுதோ அப்படிப்பட்டவர்களை கண்டால் அவர்களை விட்டு ஒதுங்கி நம் சந்தோஷத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பெரும்பாலும் இதுபோல மனிதர்களை உருவாக்குவதில் பெரும்பங்கு நமக்கும் உண்டு. நம் மனதிற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்பவர்களை விரும்பும் நாம் அதற்கு எதிர்மறையாயை உள்ளவர்களை வெறுக்கவும் செய்கிறோம். இதுவே அவர்களின் மனமாற்றத்திற்கு பெரும்பங்காக அமைகிறது. ஒன்று அவர்கள் மனதை மாற்றிக்கொண்டு நம்மோடு வருகிறார்கள் இல்லையேல் தன்னை தரம்தாழ்த்தி வேதனை அடைகின்றனர். பிறகு தன்னைத்தானே ஒரு கூட்டிற்குள் அடைத்தும் கொள்கின்றனர். பிறக்கும் போது ஒற்றுமையுடன் பிறக்கும் நாம் இறக்கும் போது எண்ணில் அடங்கா வேற்றுமையோடு போகிறோம். ஒருவரை பாராட்டி வாழ்த்த மனம்வரவில்லை என்றாலும் அவரை தூற்றாமல் இருப்பதே நாம் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும். ஒருவர் தன்னைப்பற்றி கூற தயங்கும் சூழ்நிலை உருவாகும் போதெல்லாம் நாம் ஒரு நல்ல மனிதரை இழக்கிறோம் என்றே கூறலாம். இனி வரும் காலங்களில் இது போன்று மனிதர்கள் உருவாவதை தவிர்ப்போம்!! மனிதம் வளர்ப்போம் !!

இது என்னுடைய கருத்து மட்டுமே உங்களுக்கு வேறு ஏதேனும் கருத்து இருந்தால் என்னிடம் கூறுங்கள். அது எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். 

Comments

Popular Posts