உதவி

நான் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது இரு ஆட்டோ ஓட்டுனர்கள் என்னை அவர்களிடம் வர சொல்லி அழைத்தனர். நான் அவர்களின் அருகில் சென்றவுடன் ஒருவர் தன் கையில் இருந்த கைபேசியை என்னிடம் கொடுத்து இதில் கோளாறு உள்ளதுபோல் தெரிகிறது என்னவென்று பாரு தம்பி என்றார். நான் வாங்கி பார்த்தேன். நான் சிறிது நேரம் அதை பார்த்துக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த இன்னொருவரின் கைபேசியில் அறிவிப்பு (Notification) ஒலி அடித்தது. அவர் அதை எடுத்து பார்த்துவிட்டு என்னிடம் காண்பித்து இதுபோல் தினமும் வருகிறது என்னவென்று பாரு தம்பி என்றார். நான் அதை பார்த்தபோது அது கூகுளில் வரும் வானிலை செய்தி, நான் அதை அவரிடம் விளக்கி, அது என்னவென்றும் அது ஏன் வருகிறது என்றும் கூறினேன், அவரும் அதை புரிந்துகொண்டார். பின்னர் முன்னவர் கொடுத்த கைபேசியையும் சரி செய்து கொடுத்தேன். அப்போது அவர் படிக்க கற்றுக்கொள்ளாதது பெரிய தப்பாக போய்விட்டது காலையில் ஒருவரிடம் கைபேசியை கொடுக்கபோய் இப்படி ஆகிவிட்டது, ரொம்ப நன்றி என்றார். நான் அவரிடம் நன்றியெல்லாம் வேண்டாம் அண்ணா, உங்களுடைய குழந்தைகளை நன்கு படிக்கவையுங்கள் அது போதும், அவர்கள் பின்னாளில் பலருக்கு உதவுவார்கள் என்று கூறினேன். அவர்களும் நாங்கள் செய்த தவறை எங்கள் பிள்ளைகளையும் செய்ய விடமாட்டோம் கண்டிப்பாக செய்கிறோம் என்றனர். பின் நான் வருகிறேன் என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தேன். அப்பொழுது தான் என் மனதில் ஒன்று தோன்றியது. இதே போல் பின்வரும் நாளிலும் ஒரு சூழ்நிலை வந்தால் அவர்களுக்கு உதவி செய்துவிட்டு கல்வியின் அருமையை ஒரு ஐந்து நிமிடமாவது பற்றி சொல்லி விட்டு வரவேண்டும் என்று. அது கண்டிப்பாக அவர்களிடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்களும் பின்னாளில் இதேபோல் ஒரு சூழ்நிலையில் உங்களால் முடிந்த ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன். நாம் விரும்பும் நாட்டை உருவாக்கும் கடமை நமக்கும் இருக்கிறது அல்லவா!! அறியாமையை அகற்றி இல்லாமை இல்லாத உலகம் செய்வோம்!! 

Comments

  1. Priyanga Saminathan10 February 2019 at 08:24

    Nizzzzzzz.....

    ReplyDelete
  2. Nice ¡ Dame sure tat always helps everyone in the soceity!!!The way of ur
    Expressing thoughts was well and good!!!
    Still need more to read!!..

    ReplyDelete
  3. நன்மையை செய்வோம்

    ReplyDelete

Post a Comment

Popular Posts