ஆசை😍


ஒருவர் இன்னொருவர் மீதோ அல்லது ஒரு பொருளின் மீதோ   கொண்டுள்ள அன்பும் அதை எப்படியாவது அடைய வேண்டும் என்ற நோக்கமும் பிற்காலத்தில் ஆசையாக மாறிவிடுகிறது. இவ்வாறு பிறக்கும் ஆசையை பலவகையாய் பிரிக்கலாம். இந்த ஆசையை மனதின் மீது வைத்தால் காதல் எனவும், அதுவே உடலின் மீது வைத்தால் காமம் எனவும் கூறலாம். இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளாத மூளைகள் தான் எப்படி யாருக்கும் தெரியாமல் மருத்துவமனை போய்வரலாம் என திட்டம் தீட்டுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, ஏழைக்கு மாளிகையில் வாழ்ந்துவிட ஆசை, மாளிகையில் வாழ்பவருக்கோ பிற மக்களை ஆட்சி செய்திட ஆசை. இருவருக்கும் இருக்கும் ஆசையில்  எள்ளளவும்  குற்றமில்லை, ஆனால் அந்த ஆசையை அவர்கள் எப்படி அடைகிறார்கள் என்பதை வைத்துத்தான் அது குற்றமா இல்லையா என்று கூற முடியும். பெரும்பாலும் இப்படி இருப்பவர்களில் உண்மை, நேர்மை என்ற கொள்கைகளை உடையவர்கள் கையாலாகாதவர்களாகத்தான் பார்க்க படுகின்றனர். இதற்கு எதிர்மறையான கருத்துகளை உடையவர்கள் உயர்ந்தவர்களாக பார்க்க படுகின்றனர். ஏனென்றால் அவர்கள் எளிதில் ஆசையை அடைந்து விடுகின்றனர். இதற்கு காரணம் இவர்கள் ஆசையை அடைவதிலேயே குறியாக இருக்கின்றனர், அதை எப்படி அடையவேண்டும் என்பதில் இல்லை. முன்னவர்களோ எப்படி அடைய வேண்டும் என்பதிலே குறியாக இருக்கின்றனர். நேர்மையாக இருப்பவர்களுக்கும் வெற்றி கிடைக்கும், அவர்கள் ஆசைப்பட்டதும் கிடைக்கும், ஆனால் அதற்குள் மற்றவர்கள் ஆண்டு அனுபவித்து சென்று விடுவார்கள். இதற்குரிய பொறுமை உடையவர்களே பின்னாளில் பெரும்மனிதர்களாக பார்க்கப்படுகின்றனர். மேலும் அவர்களின் எண்ணிக்கையும் குறைவாக தான் உள்ளது. காரணம் நாம் தான் இன்றைக்கு விதைக்கும் மரத்தின் பழம் நாளையே வேண்டும் என்கிறோம். மேலும் அவ்வாறு உடனே வளர்ந்த  மரம் நீண்ட   நாள் நிலைக்காது என்பதையும் பகுத்தறிய மறுக்கிறோம். ஆக ஆசைப்படுவதிலும் அதை அடைவதிலும் ஒரு தெளிவு வேண்டும். இதுமட்டுமில்லாமல் அதீத ஆசையை பேராசை என்று கூறுவர். நான்  பேராசை மிகவும் நன்றே என்றும், அது அவசியமாக தேவை என்றும், கூறுவேன். காரணம், வெறும் ஆசையை மட்டும் வளர்த்துக்கொண்டு இருந்தால் ஒரு கட்டத்திற்கு மேல் அது நிறைவேறாத ஒன்றாக தான் முடியும். இப்படி பலர் இருப்பதால் என்னவோ ஆசையை அடைய முடியாதவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதையே ஒரு சாரார் இவன் அளவுக்கு அதிகமாக ஆசை பட்டுவிட்டான், இவனுக்கு பேராசை உள்ளது என்று கூற, ஏற்கனவே தோல்வியுற்றவர்கள் பின்னாளில் கேலிபேச்சுக்கும் உள்ளாகின்றனர். இதைவிட தற்போதெல்லாம் ஒருவன் ஆசைப்பபட்டாலே அதை பேராசை என்று சொல்ல ஒரு கைலாகாத கூட்டம் வந்துவிடுகிறது. ஆக, ஒருவருக்கு ஆசை இருக்கிறது என்றால் அதை அடைய தேவையான திறமைகளை அவர் வளர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த ஆசையை அடையக்கூடிய தகுதி அவருக்கு தானாகவே வந்துவிடும் . எனவே பேராசை வைப்பது தவறில்லை அதை அடைய தேவையான திறமைகளை அடைய தவறுவதே தவறாகும், என்பது என்னுடைய கருத்து. ஒருவருக்கொருவர் ஆசைப்படுவதில் வேறுபடலாம், அதை அடையும் முறையிலும் வேறுபடலாம் ஆனால் அதற்குரிய தகுதிகளை வளர்த்துக்கொள்ள தவறக்கூடாது.


உங்களுடைய கருத்தும் என்னை இன்னும் கற்றுக்கொள்ள தூண்டும். எனவே அதை அன்போடு வரவேற்கிறேன்.
                                         - Muthukumar K
                   

Comments

  1. Idhu epdi panrathuku inum evalo visayam useful ah irukula...find that and emerge such informations ...so that everyone can understand something in their life!!!..
    Idellam neenga sonningna kuda maratha visayangal...

    ReplyDelete
  2. முயலாமல் தோற்பதை விட முயன்று தோற்பதே மேல். முயன்று தோற்றால், அதன் மூலம் கிடைக்கும் அனுபவம் பிறருக்கும் உதவும். வாழ்க்கையில் நீ தோற்றவனாக இருந்தாலும் உன்னைப்போல் முயல்பவனுக்கு நீ வழிகாட்டியாக இருப்பாய்.... அத்தனைக்கும் ஆசைப்படு

    ReplyDelete
  3. தங்களின் பதிவை தமிழில் பார்ப்பதே மிக்க மகிழ்ச்சி

    ReplyDelete

Post a Comment

Popular Posts