விடுதலை செய் பெண்ணே!!!

பெண்ணே!

உன்னை பார்த்த பொழுதினிலே!
என் இதயம் தன்னை மறந்தது;
மூளை அதை தடுக்க முயன்றது;
காரணத்தை எண்ணி தவித்தது;

ஏனோ அதற்கு தெரியவில்லை,
உன் பார்வையிலே காந்தம் வைத்து ஈர்த்து விட்டாயென்று;

உன் சிரிப்பினிலே பொறி வைத்து  சிறையிலடைத்து விட்டாயென்று;

உன் மௌனத்தால் என் மனதை கொள்ளை கொண்டாயென்று;
ஆதலால்,
அது வார்த்தைகளை கோர்க்க மறந்து, பேச்சுரிமையை என்னிடமிருந்து பறித்து, உன்னிடம் சரணடைய செய்துவிட்டது;

இந்நிலையில் என்னை வைத்து'இன்பம்' கண்டது போதும்,
உன் மனதை நீ கேட்டு
அதன் முடிவை உரக்க சொன்னால்
இக்கைதி விடுதலைப்பெற்று
உன்னுடன் வாழ்வேன் நூறு ஆண்டுகள்!!!

Comments

Popular Posts