இப்படிக்கு உன் இதயம் 💓
நீ பிறந்து 21 ஆண்டுகள் ஆகிறது, உனக்கும் உன்னை சார்ந்தோருக்கும் நீ என்ன செய்தாய் (கிழித்தாய் ) என்று உன்னை உன் இதயம் கேட்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை, அப்போது நீ என்ன பதில் சொல்ல காத்திருக்கிறாய்
- நான் ஒரு கிரிக்கெட் ரசிகன் எனக்கு அனைத்து வீரர்களை பற்றியும் தெரியும் நான் அவர்களை பாராட்டியே என் வீட்டில் உணவு செய்துவிடுவேன் என்றா !!!!!!!
- என்னை முகநூலில் 1000 பேர் பின் தொடர்கிறார்கள் அவர்கள் எனக்கு சமைத்து போடுவார்கள் என்றா !!!!!
- நான் Clash of Clans மற்றும் Mini Militia போன்ற விளையாட்டுகளில் நான் வல்லவன் அது எனக்கு சோறு போடும் என்றா !!!!!!
நீங்கள் சிறிது நேரம் தனியாக அமர்ந்து யோசித்து பார்த்தால் உங்களுக்கு புரிய வரும் நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்குறீர்கள் என்று !!!
நாளை காலை எழுந்தவுடன் எந்த நிற ஆடை அணிய வேண்டும் என்று யோசிக்கும் நாம் உள்ள இதே உலகில் எந்த இடத்தில் உணவு கிடைக்கும் என்று யோசித்து கொண்டே உறங்க செல்லும் பிஞ்சுகளும் உள்ளது !!!!!!
கிட்டத்தட்ட 100 ல் 50 பேர் தன்னுடைய காதலியுடன் ஊர் சுற்றினால் மீதம் உள்ளவர்கள் எனக்கு காதலி இல்லையே என்று புலம்பிக்கொண்டு சுற்றுகிறார்கள் !!!!!! இந்த வயதில் அவர்கள் செய்யும் காதல் சக்திமானை நம்பி மாடியில் இருந்து கீழே குதிப்பதற்கு சமம் என்பது அவர்கள் மனதிற்கு ஏன் எட்டவில்லை என்று எனக்கு தெரியவில்லை!!!!!!!!!!
ஒரு சில பேர் தங்களுடைய ஆசைக்காக செய்யும் தவறுகள் சிலருடைய உண்மை காதலையும் கொச்சைப்படுத்துகிறது!!!!!!!!!!!!!
வாழ்க்கையில் எந்த திசையில் செல்ல வேண்டும் என்று முடிவு எடுக்கும் முன்னரே யாருடன் செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்துவிட துடிக்கின்றனர்!!!!!!!!!
எந்த நாளில் என்ன திரைப்படம் பார்க்க வேண்டும் என்று திட்டமிடும் நாம்....அது நம் வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்த வகையில் உதவும் என்று சிந்திக்க ஏனோ மறுக்கிறோம் !!!!!!!அதில் உள்ள நன்மையை மறுக்கிறோம்....தீமையை வரவேற்கிறோம்....காரணம் அதை அவர்கள் திரைப்படத்தில் வைத்துள்ள சதவீதம்!!!!!!!
நாம் எப்போது என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்கிறார்கள்!!!!! நம் வாழ்க்கையை முடிவு செய்ய அவர்கள் யார்??????
உன்னை பெற்றெடுத்த தாய் தந்தையை ஒரு நிமிடம் நினைத்துப்பார்!!!!!!
நீ இப்போது இங்க இப்படி இருப்பதற்கு யார் காரணம் என்றும் நினைத்துப்பார் !!!!!
உன் பெற்றோர் உன்னை பற்றி என்ன நினைத்து கொண்டுயிருப்பார்கள் என்று நினைத்துப்பார்!!!!!!!
அனைத்து பெற்றோருக்கும் தன்னுடைய மகனே/மகளே கதாநாயகன்/கதாநாயகி!!!!!
நீங்கள் எப்படி வந்தீர்கள் என்று யாரும் யோசிக்க மாட்டார்கள் நீங்கள் எங்கே இருக்குறீர்கள் அந்த இடத்திற்கு நீங்கள் தகுதி ஆனவரா என்று உங்களை மதிப்பிட ஒரு கூட்டமே வரும்......அவர்களை பற்றி பேச ஒன்றும் இல்லாத காரணத்தினால் தான் அவர்கள் உங்களை பற்றி பேசுகிறார்கள்!!!!!!! நீங்கள் அவர்களை ஒரு உயிரினமாக கூட கருத வேண்டாம்.....
யாரை பற்றியும் யோசிக்காமல் உன் பெற்றோரை மட்டும் உன் நினைவில் வைத்துக்கொண்டு உன்னுடைய வாழ்க்கை பாதையை நீயே முடிவு செய்!!!!!!
வாழ்வில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணம் இதுவே......
நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெற நான் உங்களுடன் இறுதிவரை துணை இருப்பேன்.....
உங்கள் தோல்வியிலும் உங்களுடன் துணை இருந்து அதிலிருந்து மீள நான் வழி செய்வேன் !!!!!!
இப்படிக்கு
உன்னால் கைவிடப்பட்ட உன் இதயம் 💓
💓
Really nizzzzz
ReplyDelete