ரஸ்னாவும் வேப்பமரமும்
சாலை ஓரத்தில்,. கொளுத்தும் வெயிலில் நடக்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்த தன் வயது முதிர்ந்த கணவனின் கையைப் பிடித்து இழுத்துச்சென்று அருகிலிருந்த வேப்ப மரத்தடியில் அமரவைத்துவிட்டு பெட்டிக்கடைக்கு வேகமாக ஓடிச்சென்று ஒரு ரஸ்னா வாங்கிவந்தாள் அந்த மூதாட்டி ! வாங்கி வந்ததை அவருக்கு ஊட்டிவிட்டாள் அவள்! அதில் கொஞ்சம் குடித்துவிட்டு அவளின் கையில் இருந்ததை பிடுங்கி அவளுக்கு ஊட்டிவிட்டார் அவர் ! இப்படியாக இருவரும் ஒருவருக்கொருவர் மாறிமாறி ஊட்டிக்கொண்டனர் ஒருவழியாக அந்த ரஸ்னா காலியானது இருவரும் ஒருவர் தலையில் ஒருவர் சாய்ந்து இளைப்பாற தொடங்கினர் இதையெல்லாம் கண்ட மரமோ மனம் உருகி ...